உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தமிழினப் படுகொலையின் நேரடி சாட்சியத்தை இழந்துள்ளோம்

அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் நேற்று இறைபேறடைந்தார் இவரின் இவரது மறைவு தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை மறைவு செய்தியை வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தமிழினப்படுகொலையின் நேரடி சாட்சியத்தை இழந்துள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர்மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்தவர் அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார்.

அவரின் இழப்பு தமிழ் இனத்தை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

1996இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர்மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார்.

உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சிங்கள ஏகாதிபதியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய இம்மக்களுக்கு மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து அம்மக்களின்அன்பை பெற்றார்.

2004 இல் முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர் தப்பிய இவர் சுனாமியால் அனைத்தையும் இழந்து போன அம்மக்களிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன.

அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு எமது இறுதி அஞ்சலிகளை செலுத்தி நிற்கின்றோம் என தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க