சினிமா

விசில் அடிக்கும் “பிகில்” படக்குழு

அட்லீ – விஜய் இணையும் மூன்றாவது படமான “பிகில்” படத்தில் தளபதி விஜய்-யை வைத்து கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்குநர் அட்லீ இயக்கி உள்ளார். இந்த படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி மற்றும் செகண்ட் லுக் சுவரொட்டி வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். “பிகில்” தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“பிகில்” படத்தின் புதிய தகவல் நேற்று வெளியிடப்பட்டது. அதாவது “பிகில்” படத்தில் வெறித்தனம் என்ற முக்கிய பாடலை நடிகர் விஜய் பாடப்போகிறாராம்.

இதனை அடுத்து, “பிகில்” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜி.கே.விஷ்ணு, தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் படக்குழுவினர் விசிலடிக்கும் போஸ் கொடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க