இலங்கை அரசாங்கம் மற்றும் நெதர்லாந்து ING Bank NV வங்கிக்கிடையில் 45 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
கடந்த 10.07.2019 அன்று இவ் உடன்படிக்கையில் நிதி அமைச்சின் செயலாளர் R.H.S.சமரதுங்க, William van nouhuys மற்றும் Ms.Chloe Ajamlou ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இன் நிகழ்வு நெதர்லாந்தின் தலமையகத்தில் இடம்பெற்றது.
நெதர்லாந்துக்கான இலங்கை தூதுவர் Sumith Nakandala மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Ms. Joanne Doornewaard ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வடக்கில் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் இந் நிதியைக் கொண்டு வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது.
கருத்து தெரிவிக்க