இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் இன்று (ஜூலை 12) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை சந்தித்தார் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையில் மின்னணு நில பதிவு முறை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கான நிதி உதவி தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
அத்துடன், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வீதிஅமைத்தல் மற்றும் நாட்டில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க