இலங்கையில் கூகுள் போக்குவரத்து வசதியை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணையம் (என்.டி.சி) முதல் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் பொது போக்குவரத்தை எளிதாக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு இன்று (ஜூலை 12) தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த வசதியை அறிமுகப்படுத்த தேவையான தகவல்கள் இன்று சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பேருந்து வழித்தடங்கள், தொடருந்து நிலையங்கள், தொடருந்து பாதைகள் மற்றும் பிற பொது போக்குவரத்து தொடர்பான விடயங்களின் விபரங்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதி முதலில் மேல் மாகாணத்தில் கிடைக்கப் பெறும் என்றும் தொடர்ந்து மற்ற மாகாணங்களிலும் இது விரிவுபடுத்தப்படும் வேண்டும் அமைச்சு போலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க