உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அமெரிக்க, இலங்கை ஒப்பந்தம்: கூர்ந்து அவதானிக்கும் இந்தியா

அமெரிக்காவுடனான இலங்கையின் ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையில் எதிர்ப்புக்கள் அதிகரித்து வருவதால் இது தொடர்பில் இந்தியா கூர்ந்து கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒப்பந்தம் மூலம் புது டில்லியின் தெற்கு பகுதியில் அமெரிக்க இராணுவ தளம் அமைய வாய்ப்புள்ளதாக இந்தியாவின் எகொனோமிக் டைம்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு பாதகமாக அமையும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட மாட்டாது என பிரதமர் ரணில் தெரிவித்த நிலையில் நெருங்கிய தொடர்புகளை பேணும் நாடு என்ற வகையில் இலங்கையின் முடிவை மதிப்பதாக இந்தியா கூறியுள்ளது.

குறித்த ஒப்பந்தங்கள் இந்தியாவையும் தாக்கம் செலுத்தும் என்ற ரீதியில் இது குறித்து பெரிதும் அவதானம் செலுத்தப்படுகிறது என இந்திய மத்திய அரச தரப்பு குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இலங்கையை பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அனுமதிக்க போவதில்லை என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க