முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி மேற்கொள்ள கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான ஜெயரத்ன, தனது தனிப்பட்ட செயலாளரை அமைச்சில் ‘ஒருங்கிணைப்பு செயலாளர்’ பதவிக்கு நியமித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த நியமனம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றம் 2011 ஓகஸ்ட் 16,மற்றும் 2013 டிசம்பர் 31, க்கு இடையில் இந்த குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக முன்னாள் அமைச்சர் ஜெயரத்ன மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் பி. தயாவங்ச ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க