உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- சாட்சியங்களுக்கு அழைப்பு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்ய வருகின்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு பாதுகாப்பு படையின் முக்கியமானவர்களுக்கு சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

அதன்படி காவல் துரையின் உயர் மட்ட அதிகாரிகளுக்கும் அதேபோல புலனாய்வு பிரிவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சாட்சியமளிக்கின்ற நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தலைவராக இருக்கின்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி தெரிவித்திருக்கின்றார்.

இவர்கள் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி இந்த தெரிவுக்குழுக்கு முன்னாள் சாட்சியமளிக்க வேண்டும் என கோரப்பட்டிருப்பதாக இவர் தெரிவித்திருக்கின்றார்.

இதில் சாட்சியமளிக்க வருமாறு கேட்கப்பட்டிருக்கின்ற ஆட்களில் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவித்திருக்கின்றார்.

குறிப்பாக தேசிய புலண்ணாய்வு பிரிவின் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன,  குற்ற புலண்ணாய்வு பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அதிபர் ரவி செனவீரத்ன, குற்ற புலண்ணாய்வு துறையின் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரும் இந்த சாட்சியங்களை வழங்குமாறு அழைக்கப்பட்டிருப்பதாக பிரதி சபா நாயகர் குமார சிறி தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் வருண ஜெயசுந்தரவும் அதேபோல பயங்கரவாத தடுப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் தரங்க பதிரனவும் இந்த தெரிவுக்குழுவில் முன்னிலையில் சாட்சியமளிக்கமாரு கேட்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை இந்த அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பிக்கும் போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்து தெரிவிக்க