உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -சட்ட மா அதிபர் ஆஜர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற அடிப்படை மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்பில் இன்று சட்ட மா அதிபர் ஆஜராகவிருக்கின்றார்.

அதாவது தமக்கு நட்ட ஈடு கோரி மற்றும் ஏனைய கோரிக்கைகள் முன்வைத்து 12 பேர் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள் .

இதனிடையில் இன்று இந்த வழக்கு தொடர்பில் ஒரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற சட்ட மா அதிபர் தகுல டி லிவேரா உயர் நீதி மன்ற ஆணையின் படி இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவிருக்கின்றார்.

இந்த நீதிமன்ற தகவலின் படி இந்த வழக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு 7 பேரை கொண்ட நீதியரசர்கள் குழாமில் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனக அலுவிகார, சிசிர ட ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ,பி தெகிதெனிய , மருது பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் இந்த விசாரணையை மேற்கொள்ள இருக்கின்றாரகள்.

கருத்து தெரிவிக்க