வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற சில வைத்தியர்கள் இலங்கை இராணுவத்தில் எவ்வித பதிவுகளும் இன்றி பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றசாட்டை ஜேவிபி முன்வைத்திருக்கின்றது.
குறித்த மருத்துவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொள்ள படவேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு பதிவு செய்துகொள்ளாமல் இலங்கை இராணுவத்தில் பணியாற்றுவதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பயிலும் இலங்கை வைத்தியர்கள் இலங்கை மருத்துவ சபையில் ஒரு உள்ளக பயிற்சிக்கு தோற்ற வேண்டும் அதன் பின்னர் அவர்கள் அதில் தேறினால் மாத்திரமே இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வைத்தியராக கருதப்படுவர் என்றாலும் அவ்வாறு பதிவு செய்யப்படாத பலர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றுவதாகவே அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் இராணுவம் இவ்விடயம் தொடர்பாக எவ்விதமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.
கருத்து தெரிவிக்க