உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எவ்வித முயற்சிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவில்லை.
சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினரே மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணையும் திட்டங்களை வகுத்து வருகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைககையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வருட இறுதியில் நடத்த வேண்டிய ஜனாதிபதி தேர்தலை எக்காரணிகளுக்காகவும் பிற்போட இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயத்தில் அவர் இன்றும் உறுதியாக உள்ளார். அரசியலமைப்பிற்கு முரணாக ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எவ்வித முயற்சிகளையும் அவர் முன்னெடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க