பாடசாலை அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குவது பற்றி நிதியமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் பி.சி.பெரேரா சம்பள அறிக்கையின் மூலமே இந்த சம்பள முரண்பாட்டு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டுக்கு அமைவாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர்களின் சம்பளம் 106 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் ஆலோசகர்கள் சம்பள முரண்பாடு குறித்து குறுகிய காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க