சினிமா

ஜீலை 26 இல் வெளியாகவுள்ள தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா!

கவுதம் மேனனின் இயக்கத்தில் தர்புகா சிவாவின் இசையில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, ராணா மற்றும் சசிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தின் படப்பிடிப்புகள் 2016ம் ஆண்டே தொடங்கப்பட்டுருந்தது. இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக படப்பிடிப்புக்களில் தடை ஏற்பட்டிருந்தாலும் ஒருவழியாக படப்பிடிப்பை முடித்தனர் படக்குழுவினர். அதனை தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வந்தது. அந்நிலையில் ஏப்ரல் மாதமளவில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தும் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை லைகா நிறுவனம் வாங்கி உள்ளதாகவும் படத்திற்கு தணிக்கை குழுவினால் யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஜீலை 26 இல் படம் வெளியாகும் எனவும் சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க