விளையாட்டு செய்திகள்

2–வது அரை இறுதியில் அவுஸ்திரேலியா–இங்கிலாந்து இன்று போட்டி

உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பெர்மிங்காமில் இன்று நடைபெறும் 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளார் அவுதிரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி லீக் ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2–வது இடம் பிடித்தது.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் எடுத்து 3–வது இடம் பிடித்தது.

கருத்து தெரிவிக்க