உள்நாட்டு செய்திகள்புதியவை

‘மாணவர் மற்றும் குடியுரிமை விசாக்களில் திருத்தம்’

மாணவர் மற்றும் குடியுரிமை விசா வழிகாட்டல்கள் இந்த மாதத்திலிருந்து திருத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, மாணவர் விசாக்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே வழங்கப்படும். முன்னைய திட்டத்தின் படி கல்விகாலம் வரையில் விசா அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மேலும், குடியுரிமை விசாக்களைப் பெறுவதற்கு பண வைப்புகளைப் பராமரிக்கும் நபர்கள் விசாவைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் அந்த நிதியை முதலீடு செய்ய வேண்டும் என ரத்நாயக்க கூறியுள்ளார்.

இந்த ஒழுங்குமுறையை பின்பற்றாதவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

500,000 அமெரிக்க டொலர்கள் வைப்புத்தொகையை பராமரிக்கும் நபர்களுக்கு 10 ஆண்டு குடியுரிமை விசா வழங்கப்படும், 300,000 அமெரிக்க டொலர்கள் வைப்புத்தொகை உள்ளவர்களுக்கு ஐந்தாண்டு குடியுரிமை விசா வழங்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

 

கருத்து தெரிவிக்க