18 வயதிற்கு உட்பட்ட போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வு அளிக்க மாகாண அளவிலான திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாடு சபை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்த அறிக்கையில்18 வயதிற்குட்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாடு சபை மற்றும் காவல்துறை இந்த அறிக்கையை தொகுத்துள்ளன. அந்த அறிக்கையின்படி, 6100 சிறுவர்கள் ஹெரோயின் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
எண்ணிக்கையிலான போதைக்கு அடிமையானவர்களின் பட்டியலில் மேல் மாகாணம் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையை மாற்றும் முயற்சியில் தற்போது போதைப்பொருள் விழிப்புணர்வு திட்டங்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு மேலும் குறிப்பிடுகிறது.
கருத்து தெரிவிக்க