உள்நாட்டு செய்திகள்புதியவை

‘சட்டத்தரணிகள் சங்கம் பெயரை அழித்துக்கொண்டது’

அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் (ஏபிஏ) ஒரு கிளையையோ அல்லது அதனுடன் இணைந்த எந்தவொரு அமைப்பையோ நிறுவ அனுமதி வழங்கியதாகக் கூறப்பட்ட கூற்றுக்களில் உண்மை இல்லையென நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொறுப்பான (நீதித்துறை) அமைச்சராக இது போன்ற அனுமதிகளை நான் வழங்கவில்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரல ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தை அமைப்பதற்கான அனுமதியை நீதியமைச்சர் மறுக்கவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இதற்கு பதில் வழங்கும் வகையில் குறித்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் அல்லது என்னை கலந்தாலோசிக்காமல் அற்ப அரசியல் நோக்கங்கங்களுக்காக செய்யப்பட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கைகள் மூலம் அதன் பெயரை அழித்துவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற “தவறான” கருத்துக்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடும் என்பதால் சட்டத்தரணிகள் சங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

மேலும், நாட்டை அழிக்கும் வகையில் அரசாங்கம் செயல்படாது என்றும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க