இந்த நாட்டின் மக்களுக்கும், பாதுகாப்புக்கும் தொடர்ந்தும் பொறுப்பேற்கும் தகுதியை அரசாங்கம் இழந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் (10) தற்போது நடைபெற்றுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து நாட்டின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தவறிவிட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது சகாக்களின் பயங்கரவாத தாக்குதல் குறித்த பல எச்சரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கத் தவறிவிட்டது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தவறியதன் மூலம் அரசாங்கம் குற்றத்தரப்பாகியுள்ளமை தெளிவாகத் தெரிகிறது என ஜேவிபி தலைவர் வலியுறுத்தினார்.
அதன்படி, நாட்டின் அல்லது அதன் மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கும் உரிமையினை அரசாங்கம் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க