உள்நாட்டு செய்திகள்புதியவை

ஞானசார தேரரின் விடுதலை: விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு அக்டோபர் 10 ஆம் திகதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவித்த நடவடிக்கைக்கு எதிராக சந்தியா எக்னெலிகொட அடிப்படை மனித உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்ய ஏனைய பிரதிவாதிகள் ஆலோசனையைப் பெற வேண்டும் என தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதி குழு முன்னிலையில் உரையாற்றிய சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஞானசார தேரரின் பொது மன்னிப்பு நீதித்துறையை நேரடியாக பாதித்துள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இது தனிநபர்களை சமமாக நடத்த வேண்டும் என்று விதிக்கும் அரசியலமைப்பின் 12 (1) வது பிரிவை மீறும் செயல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் சட்டமா அதிபர், ஞானசார தேரர், நீதி அமைச்சர் தலத அத்துகோரல ஆகியோரை பதில் வழங்குநர்களாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க