உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் பாடப்புத்தகத்தில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக கிழக்கு மாகாண கல்வி செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர முதல் முறை தெரிவுக்குழு அழைப்பிற்கு வர தவறிய நிலையில் இரண்டாவது முறையாக தெரிவுக்குழு முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுவெடிப்பு தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருப்பதாகக் கூறி தயாசிறி ஜெயசேகர குறித்த குழு முன் ஆஜராக மறுத்திருந்தார்.
இதேவேளை நீதிமன்ற வழக்குகள் தொடரப்பப்டும் நிலையில் தெரிவுக்குழு முன் அழைக்கப்படுவது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் வகையில் அமையுமா என்பது குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரியாவிடம் அவர் விளக்கம் கோரியிருந்தார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அவ்வாறு செய்வது பொருத்தமானது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று ஆஜராகுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க