தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்ரியவை கோரியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு செய்தி மாநாட்டில் உரையாற்றிய தேர்தல்கள் ஆணைகுழு தலைவர் நவம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தாம் பதவி விலகுவதாக எச்சரித்தார்.
எவ்வாறாயினும், நேற்று (ஜூலை 9) தேஷப்ரியவுடனான சந்திப்பின் போது பிரதமர் சேவைகளைத் தொடரவும், வரவிருக்கும் தேர்தல்களுக்குத் தயாராகுமாரும் கேட்டுக் கொண்டார்.
எதிர்வரும் தேர்தல்களுக்கு அவரது சேவைகள் தேவைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் எட்டு மாகாண சபைகள் தற்போது கலைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஊவா உள்ளூராட்சி சபை காலம் செப்டம்பர் 8 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க