இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
தனது மகன் தஹமின் பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.
இதேவேளை இங்கிலாந்துக்கு புறப்படும் முன்னர் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு தொடர்பில் கண்காணிப்பதற்காக ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகமவின் தலைமையில் இந்தக்குழு அமைக்கப்பட்டது.
இதில் சட்டத்தரணிகள் சங்க தலைவர் காலிங்க இந்திரதிஸ்ஸ,சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தக்குழுவினர் ஜனாதிபதி இங்கிலாந்துக்கு புறப்படும் முன்னர் இன்று காலை ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்தினர்.
கருத்து தெரிவிக்க