மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக 396 சிறிய நீர்பாசனக்குளங்கள் முழுமையாக வற்றியுள்ளதாக கமநல சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.ஜெகந்நாதன் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் 14 பிரதேச செயலப்பிரிவுகளும் வறட்சியினால் முற்றாகப் பரிதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்கும் சிறிய நீர் பாசன குளங்கள் அனைத்துமே முற்றாக வற்றியுள்ளன.
இதனால் விவசாயிகள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி வாகரை வவுணதீவு கிரான் செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள குளங்கள் முற்றாக வற்றிக் காணப்படுகின்றன.
இதேவேளை உன்னிச்சை உறுகாமம் வாகனேரி நவகிரி போன்ற பெரிய குளங்களின் நீர்மட்டங்களும் பெருமளவு குறைவடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்
கருத்து தெரிவிக்க