உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

21/4 தாக்குதல் – நாளை கூடுகிறது தெரிவுக்குழு! ஆஜராகிறார் தயாசிறி?

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு  நாளை (10) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த அழைப்பை தான் ஏற்கப்போவதில்லை என முன்னதாக அறிவித்திருந்த தயாசிறி ஜயசேகர, இவ்விவகாரம் குறித்து சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று இன்று (09) அறிவித்தார்.

” தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதானது, நீதிமன்ற நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற உத்தரவாதத்தை சபாநாயகர் வழங்கினால், தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தயாசிறி சாட்சியமளிப்பார்.”  என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

 

 

 

 

கருத்து தெரிவிக்க