உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அமரிக்காவுடனான உடன்படிக்கையின் பாதக அம்சங்கள் நீக்கப்படவேண்டும்

அமரிக்காவுடனான பாதுகாப்பு உடன்படிக்கைகளில் சில சரத்துக்கள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படு;த்தக்கூடியன.
அவற்றை  உடன்படிக்கையில் இருந்து அகற்றவேண்டும் என்று படைகளின் தலைமையதிகாரி ரவீந்திர விஜயகுணரட்ன தெரிவித்துள்ளார்.

நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திடும் முன்னர் அல்லது உடன்படிக்கை தயாரிக்கப்படும் முன்னர் அது தொடர்பில் படையதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவேண்டும்.

எனினும் அது அமரிக்க உடன்படிக்கை விடயத்தில் இடம்பெறவில்லை.

இந்தநிலையில் சீனாவுக்கு ஹம்பாந்தோட்டையை 99 வருட குத்தகைக்கு கொடுக்கும்போது ஏன் தம்முடன் உடன்படிக்கையை செய்து கொள்ளமுடியாது என்று அமரிக்கா கேட்கக்கூடும்.

இதற்கு சர்வதேச ரீதியில் இலங்கையின் அமைவிடமே காரணம் என்றும் ரவீந்திர விஜயகுணரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க