உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘ஜனாதிபதி வடக்கிற்கு மூன்று நாள் விஜயம்’: அங்கஐன்

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் வடக்கிற்கு மூன்று நாள் விஐயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் நாவலர் மண்டபத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு மூன்று நாள் விஐயமொன்றை ஐனாதிபதி மேற்கொள்ளவுள்ளார். இதன் போது பல இடங்களுக்கும் சென்று பல அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

ஐனாதிபதியின் இந்த விஐயத்தில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக ஆளுநருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்டு வருகின்ற மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கவுள்ளார். அத்தோடு நிண்ட காலமாக தடைப்பட்டு இருக்கின்ற பருத்திதுதுறை துறைமுகப் புனரமைப்புப் பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மேலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அவர்களின் தேவைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருக்கின்றது.

அத்துடன் காணி விடுவிப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதுடன் ஐனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டம் மற்றும் கிராம சக்தி வேலைத் திட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க