இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி நேற்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
”என் நண்பன்!! என் தலைவன்!! ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் #தல இப்பிடி சொல்லிட்டே போலாம் சோதனைகளை எல்லாம் சாதனையா மாத்துற ஒரு சக்தி டோனி .
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நண்பா மக்களின் நிரந்தர சொந்தமே உலக கோப்பை வென்று வா” என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
மகேந்திர சிங் டோனி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடி வருகிறார்.
இதனால் சென்னை அவருக்குப் பழகிப்போன ஊர், மிகவும் பிடித்த ஊரும் கூட. சென்னை எனது இரண்டாவது வீடு என்றே கூறியிருக்கிறார் டோனி .
மேலும் அவருடைய சி.எஸ்.கே ஆவணத்தில் தமிழக ரசிகர்கள் என்னை தல என்று கூப்பிடுவார்கள் எனக்கு அர்த்தம் தெரியவில்லை, என்றாலும் மிகவும் பிடித்தது.
இப்போது எனக்கு அவர்கள் கூப்பிடுவதே பழகிவிட்டது. அதுவும் எனது பெயர் போலவே ஆகிவிட்டது என்று கூறியிருந்தார்.
கருத்து தெரிவிக்க