உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் வெளிநாடுகளுக்கு ஐந்துலட்சத்து முப்பதாயிரம் ரூபா கடன்

இலங்கையில் ஆள்ளொன்றுக்கு தற்போது ஐந்துலட்சத்து முப்பதாயிரம் ரூபா கடனாக இருப்பதாக முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையின் பிரஜை ஒருவர் தற்போது வெளிநாடுகளுக்காக, ஒருவருக்கு ஐந்துலட்சத்து முப்பதாயிரம் ரூபா படுக்கடன் செலுத்த வேண்டி இருப்பதாக பொலன்னறுவையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது என மேலும் தெரிவித்திருக்கின்றார்.

பிறந்த குழந்தை ஒன்றுக்கு ஐந்துலட்சத்து முப்பதாயிரம் ரூபா கடன் என்று சொல்ல படுகின்ற நிலையில் இலங்கையின் பொருளாதாரம் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணரவேண்டும் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

குறித்த நிலைமைக்கு கடந்த 35 வருடகாலமாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களே பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருப்பதையும், அது கட்டியெழுப்ப பட வேண்டிய தேவை இருப்பதையும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

ஏற்கனவே இந்த காமினி விஜேசிங்க எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஜேவிபி யுடன் இனைந்து அரசியலில் ஈடுபடவுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியிருத்தமை குறிப்பிடத்தக்கது .

கருத்து தெரிவிக்க