உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு ரவிநாத ஆரியசிங்க மறுப்பு

இலங்கையின் இராஜ தந்திரி ஒருவருக்கு அமெரிக்காவில் இடம்பெறுகின்ற ஒரு பயிற்சிக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளளது.

குறித்த அழைப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில் வெளி விவகார அமைச்சில் பணியாற்றும் ஒருவருக்கு அமெரிக்காவின் [visittet programme] என்று சொல்லப்படுகின்ற IBP என்ற திட்டத்தின் கீழ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளளது.

ஒரு மாத காலத்திற்கான பயிற்சி இதன்போது வழங்கப்படும் என்ற அறிவிப்புதான் வெளியிடப்பட்டிருக்கின்றது.

என்றாலும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இந்த அழைப்பிதழ் எவ்வாறு அமெரிக்க தூதகரத்தினால் அனுப்பப்பட்டது என்ற விடயத்தை எழுப்பியுள்ளார்.

இதனடிப்படையில் குறித்த இராஜ தந்திரிக்கு இந்த அமெரிக்க அழைப்பின் பெயரில் அமெரிக்கா செல்ல முடியாது என்ற உத்தரவை அவர் பிறப்பித்திருக்கின்றார்.

அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் இராஜ தந்திரியாக இருக்கும் வரை இந்த அமெரிக்க நிகழ்ச்சி திட்டத்திற்கு அவரால் செல்ல முடியாது என்ற காரணத்தையும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்திருக்கின்றார்.

கருத்து தெரிவிக்க