சினிமா

வெளியானது விக்ரம் பிரபுவின் ‘அசுரகுரு’ ட்ரைலர்

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகியுள்ள அசுரகுரு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

`துப்பாக்கிமுனை’ திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் `அசுரகுரு’. இப்படத்தை இயக்குநர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜ்தீப் என்பவர் இயக்கியுள்ளார்.

மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதில், விக்ரம் பிரபு கொள்ளையனாக நடிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கருத்து தெரிவிக்க