உள்நாட்டு செய்திகள்புதியவை

‘தகுதியற்ற தலைமைத்துவத்தால் மக்கள் அநாதரவாகியுள்ளனர்’

இலங்கையில் தகுதியற்ற தலைமைத்துவம் செயற்படுவதால் இலங்கை மக்கள் அநாதரவாகி உள்ளதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

‘கண்டியில் இன்று பௌத்த பிக்குகளின் பேரணி நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வலதுசாரி தேசியவாத அமைப்பான பொதுபலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேரணியில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பிற்பகல் 2 மணிக்கு போகம்பரை மைதானத்தில் ஒன்றுகூடல் இடம்பெற்றது. இதை தொடர்ந்து தேரர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

மகா சங்கத்தினர் மற்றும் பண்டைய சிங்கள மக்கள் இணைந்து உருவாக்கிய பழைய நிலையை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும்.

தகுதியான தலைவர் இல்லாத காரணத்தினால் இந்த தேசத்தை உருவாக்கிய சிங்களவர்கள் அநாதரவாகியுள்ளனர். அத்தகைய நிலையில் இருந்து நாமே இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

எனவே இது தொடர்பில் பொதுவில் ஆராய்வதற்கு மத குழுக்கள் மற்றும் அரசியல் அணிகளுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.’

கருத்து தெரிவிக்க