உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கோட்டாபயவை வேட்பாளராக அறிவிக்க மஹிந்தவிற்கு விருப்பம் இல்லை

கோட்டாபய ராஜபக்ஷவின் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ அவரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இதுவரையில் பெயர் குறிப்பிடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவுடன் நீண்ட நாட்கள் கடமையாற்றிய அனுபவம் உள்ள காரணத்தினால் அவரிற்கு கோட்டாபய ராஜபக்ஷ மீது விருப்பம் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க