பெல்ஜியம் நாட்டில் இருந்து கல்கிஸையைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பிய பொதியினுளிருந்து அதிகளவிலான போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கல்கிஸையைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர் நேற்று முன்தினம் கொழும்பு தபால் மத்திய நிலையத்திற்குச் சென்ற சமயம் அவரின் முகவரிக்கு வந்த பொதியை சுங்க அதிகாரிகள் பிரித்து பரிசோதனை செய்தனர்.
இதன்போது ஒலி பெருக்கி சாதனப் பாகம் ஒன்றினுள் இருந்து 27.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெதபெடமின் என்னும் பெயருடைய 5500 போதை வில்லைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதனைப் பெறுவதற்காக வருகை தந்தவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க