கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்த தொகுதியில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனின் பட்டிருப்புத் தொகுதிக்குரிய செயலகம் களுவாஞ்சிகுடியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டள்ளது என கூறுவதை விட நாம் செய்த தவறை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
எமது வேட்பாளர்களுக்குள் விட்டுக் கொடுப்புக்கள் இருந்திருந்தால் இந்த பட்டிருப்புத் தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைத்திருக்கும்.
பட்டிருப்புத் தொகுதியில் கடந்த காலத்தில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். 3 மாகாணசபை உறுப்பினர்கள் இருந்தார்கள்.
எனவே இவ்விடயத்தில் பட்டிருப்புத் தொகுதி மக்கள் தவறு செய்யவில்லை , உறுப்பினரிடையே விட்டுக்கொடுப்பின்மையே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்து தெரிவிக்க