வடகொரியாவில் உள்ள கில் இல் சங் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க மாணவர் அலெக்ஸ் சிங்லே (29), வடகொரியாவில் உளவு பார்த்து தகவல்களை பகிர்ந்து கொண்ட குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன் அவர் காணாமல் போயுள்ளதாக, அவரது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் கைதான மாணவர் பற்றிய தகவலை அரசு தரப்பு வெளியிட்டுள்ளது. அதில், வடகொரிய அரசின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார் எனவும், குற்றத்தை ஒப்புக் கொண்டு நாட்டின் இறையாண்மையை மீறியதற்காக மன்னிப்புக் கோரினார் எனவும் , தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க