உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நகரங்களை நோக்கி மாணவர்கள்- கிராமப்புற பாடசாலைகளுக்கு பாதிப்பு

நகரங்களை நோக்கி மாணவர்களை நகர்த்துவதால் கிராமப்புற பாடசாலைகளை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

நகர பாடசாலைகளில் படித்தால்தான் முன்னேறலாம் என்ற மனோநிலை மாறி கிராமப்புற பாடசாலைகளில் படித்தாலும் முன்னேற முடியும் என்ற மனோ நிலை உருவாக வேண்டும் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் இன்று நாங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்கின்றோம் என்றும் கிராமப்புற பாடசாலைகளை வளர்ச்சியடையச் செய்து அதனுடாக சிறந்த கல்வியாளர்களை உருவாக்க முனையவேண்டும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பிரதேச செயலாளர்களை உருவாக்கிய பகுதி இந்த களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுதான் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க