உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற அடிப்படையில் காவல் துறை மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கொழும்பு நாரஹேன்பிட்டிய காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற பூஜித்த ஜெயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வு துறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
கொழும்பு நீதிவான் ரங்கா திஸ்ஸநாயஜக இதற்கான அனுமதி வழங்கியிருக்கின்றார்.
இதனடிப்படையில் பூஜித்த ஜெயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வு துறையினைர் வாக்கு மூலங்களை பெறவிருக்கின்றார்கள்.
மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் துறை தலைமையகத்தில் பணியாற்றிய காவல் துறை அதிகாரி ஒருவர் மீது சில அத்துமீறல் நடவடிக்கைகளை பூஜித்த ஜெயசுந்தர மேற்கொண்டுள்ளார்.
இது குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலும் இந்த வாக்கு மூலத்தின் போது வாக்கு மூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க