பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு தொடர்பாக புதிய ஒரு அமைப்பை உருவாக்க தீர்மானித்துள்ளது.
குறித்த அமைப்பு பாதுகாப்பு அமைச்சின் கீழ் அமைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்களை தடுப்பதற்கும் உள்ளூரில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற மதவாத தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்துவதற்கும் அவர்களை கண்காணிப்பதற்குமான இந்த விசேஷ பிரிவு ஆரம்பிக்கப்படவிருப்பதாக சிரேஷ்ட ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு அடிப்படையில்தான் குறித்த பிரிவு அமைக்கப்படவிருக்கின்றது .
குறித்த அமைப்பு மேஜர் ஜென்ரல் தர்ஷன ஹெட்டி ஆராச்சி தலைமையில் அமையப்பெறவிருக்கின்றது.
இந்த பிரிவின் கீழ் பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றனர்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப் படவிருக்கின்றது என தெரியப்படுத்தப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் புலண்ணாய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே விசேட பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
கருத்து தெரிவிக்க