ஸ்ரீ லங்கா பொஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் மூடி மறைக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. கூட்டணி அமைக்க வரும் எந்தவொரு கட்சியும் இதற்கு எதிராக நிபந்தனை விதிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
இந்த நாட்டில் செல்வாக்குள்ள ஒரே மனிதர் மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே. அவரது தீர்மானம் இதுவாகத்தான் உள்ளது எனவும் ரோஹித அபேகுணவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.
கருத்து தெரிவிக்க