உள்நாட்டு செய்திகள்புதியவை

பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எச்சரிக்கிறார் ஹரீஸ் எம்.பி

தமிழ் தலைமைகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனை  பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் சமூர்த்தி பயனாளிகளுக்கு  உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இதில், கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்களை உணர்ந்து அவர்களுடன் கைகோருக்க வேண்டிய உணர்வு முஸ்லிங்களுக்கு இருந்தது, ஆனால், எங்களின் நியாயத்தை மறுக்கும்போது எங்களின் பாணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தலைமைகள் நியாயமில்லாமல் நடந்து கொள்கின்றார்கள் அவர்கள் இதன் பின்விளைவுகளை சிந்திக்க வேண்டும் எனவும் எச்.எம்.எம்.ஹரீஸ் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்தார்.

குறித்த நிகழ்வில்,பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான தயா கமகே கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டார்.

மேலும் கல்முனை பிரதேச செயலாளர் திரு எம்.எம்.நஸீர், கல்முனை தொகுதி ஐ.தே. க. அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ரஸாக், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, சமூர்த்தி திணைக்கள உயரதிகாரிகள், சமூர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க