இலங்கையில் சட்ட தரணிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பை எதிர்பார்த்திருக்கின்றது.
இந்த சந்திப்பிற்கான கோரிக்கை, குறித்த அதிகாரிகளிடம் விடுக்கப்பட்டிருக்கின்றது என சட்ட தரணிகள் சங்கத்தின் தலைவர் காளிங்க இந்த திஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தற்போது மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி சட்டத்தரணிகளின் நியமனம் குறித்த சர்ச்சை தொடர்பில் இந்த சந்திப்பில் பேசவுள்ளதாக காளிங்க இந்ததிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்ட தரணிகளை நியமிக்கும் போது அதற்கான உரிய நடைமுறைகள் செயற்பட்டுவருகின்றன எனினும் தற்போது ஜனாதிபதி அண்மையில் இந்த ஜனாதிபதி சட்ட தரணிகள் நியமிக்கும் போது சில வரைமுறைகளை மீறியிருக்கின்றனர் என்ற குற்றச்சாற்று சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த அடிப்படையினிலே காளிங்க இந்தசிஸ்ஸ இந்த சந்திப்பை கோரியிருக்கின்றார்.
1801 ஆம் 1 ஆம் ஆண்டின் அடிப்படையில் இலங்கையின் சட்டநடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க