சினிமா

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடிய அனிருத்!

கமலின் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 மற்றும் அவரது தயாரிப்பில் உருவாகும் கடாரம் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். அதனடிப்படையில் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகி விட்டார் என்றே கூறலாம். கடாரம் படத்தினை தொடர்ந்து வைபவ பல்லாக் லால் வாணி நடித்து வரும் சிக்ஸர் என்ற படத்திற்கு இசையமைத்து வரும் ஜிப்ரான் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு பாடலை உருவாக்கியிருந்தார். அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் ‘பா பா பிளாக் ஷிப்’ என்ற பாடலை ஜிப்ரானின் இசையில் பாடியுள்ளார். இத்தகவலை ஜிப்ரான் தனது இணையத்தில் பதிவிட்டுள்ளார். இப்பாடல் விரைவில் தனிப்பாடல் அல்பமாக வெளியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க