இந்திய இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 264 ஓட்டங்களை பெற்றது.
இதில் மெத்யூஸ் 113 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கட் இழப்புக்கு 265 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
ரோஹிட் சர்மா உலக கிண்ணப்போட்டிகளில் தமது ஐந்தாவது சதத்தை பெற்றார்.
ராஹ_ல் உலக கிண்ணப்போட்டிகளில் தமது முதல் சதத்தை பெற்றார்.
கருத்து தெரிவிக்க