” ஐக்கிய தேசியக் கட்சி, முக்கிய பிரமுகர் ஒருவரையே ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கவுள்ளது. எனவே, ஜனாதிபதியும், பிரதமரும் மீண்டும் இணைந்து செயற்படக்கூடும்.” – என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
” அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு என்னால் ஒருபோதும் ஆதரவு வழங்கமுடியாது.
இதன்காரணமாகவே தாமரை மொட்டுடமான உறவை முறித்துக்கொண்டு சுதந்திரக்கட்சிகாரனாக அரசியலை முன்னெடுக்கின்றேன்.
கூட்டு எதிரணி ஓரங்கட்டிவிடும் என்ற அச்சத்தால் என்னால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்கு இனி மக்கள் அணிதிரண்டு வருகை தராமல் இருக்கலாம். மக்கள் என்னை நிராகரித்தால்கூட பரவாயில்லை. கொள்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பயணிப்பதும் இலகுவான விடயமல்ல. ஜனாதிபதி வேட்பாளராக முக்கிய பிரமுகர் ஒருவரையே ஐ.தே.க. களமிறக்கவுள்ளது. அதன்பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் மீண்டும் இணைந்து பயணிக்ககூடும்.” என்றும் குமார வெல்கம குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க