பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வருவதோடு ஆரம்பமானது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் மடை பரவி பூஜை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு தற்போது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கே ஆண்டு உற்சவங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து ஆலயத்திலேயே அபிஷேகம் மற்றும் வளர்ந்து நேர்ந்து பொங்கல் மற்றும் விசேட அம்சமாக சமூக வலைத்தள நண்பர்கள் ஆலய நிர்வாகத்தினர் இணைந்து நடத்துகின்ற 108 பானைகளில் பொங்குகின்ற பொங்கல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஆலய வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க