துருக்கியில் , அமெரிக்க நாட்டின் எஃப்- 35 ரக போர் விமானம் மற்றும் ரஷ்யாவின் எஸ் – 400 ஏவுகணைகள் ஆகிய இரண்டினையும் வைத்திருக்க முடியாது எனவும் , துருக்கியின் வீரர்களுக்கு எஃப்- 35 விமானத்தை இயக்கும் பயிற்சியினை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் எஸ் – 400 ஏவுகணைகளை துருக்கிக்கு அனுப்பப் போவதாகவும் , அதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்யாவின் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து துருக்கி எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.
கருத்து தெரிவிக்க