சினிமா

மலையாளப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி!

ஜெயராம் மற்றும் ஆத்மியா நடிக்கும் “மார்கோனி மத்தாய்” மலையாளப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தமிழ் நடிகரான விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜெயராம் ஒரு செக்யூரிட்டி கதாபாத்திரத்திலும், ஆத்மியா ஸ்வீப்பராகவும் விஜய் சேதுபதி ஒரு நடிகராக  சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இம் மலையாள படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பது மலையாள ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி தெலுங்கில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் “சை ரா” படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. ஆக இவ் வருடத்தில் தமிழைத் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் விஜய் சேதுபதி அறிமுகமாகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க