தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக அடுத்த தேர்தலில் முஸ்லிம் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்வரும் காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வஹாப் அடிப்படைவாதத்தின் படி 20 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு இந்த அரசாங்கம் இடம் அளித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நுகேகொடையில் அடிப்படை வாதத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சிங்கள மக்கள் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்களுக்கு செய்வதில்லை இந்த அச்சத்தைப் போக்கி எதிர்வரும் காலங்களில் அவர்களின் வர்த்தகத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க