உள்நாட்டு செய்திகள்புதியவை

அவசரகால ஒழுங்குமுறைக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

அவசரகால ஒழுங்குமுறையின் சில உட்பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அக்டோபர் 8 ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 5) அறிவித்தது.

புரவெசி பலய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட மற்றும் கொள்கை மாற்று மையத்தின் (சிபிஏ) நிர்வாக தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட அவசரகால ஒழுங்குமுறைகளின் 19 மற்றும் 58 பிரிவுகள் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த மனு தாரர்கள் பாதுகாப்பு செயலாளரின் அனுமதியைப் பெறாமல் அவசரகால சட்டத்தின் பிரிவு 19 ன் கீழ் நபர்களை கைது செய்ய முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கருத்து தெரிவிக்க