ஷரீயா சட்டத்தின் கீழ் 20 பேருக்கு காத்தான்குடி பிரதேசத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற வாகாப் வாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
வட்டிக்கு பணம் கொடுத்தல், சூது, விபச்சார தொழிலில் ஈடுபட்டமை, இராணுவத்தில் இணைந்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக 20 பேருக்கு ஷரியா சட்டத்தின் படி மரண தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பில் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வாஹாபி அடிப்படை வாதத்தினை துடைத்தெறிய அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனவும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் அழைப்பு விடுத்தார்.
கருத்து தெரிவிக்க